சவுதி அரேபியாவில் முக்கிய அதிகாரிகள் மற்றும் பணக்காரர்களை கைது செய்து சிறை வைத்திருந்த சொகுசு சிறை மீண்டும் விடுதியாக மாற்றப்பட்டுள்ளது. சவுதிஅரேபியாவில் பட்டத்து இளவரசராகக முகமது பின் சல்மான் பதவியேற்றதில் இருந்து அங்கு அதிகளவில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சில நாட்களுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைளின் போது இளவரசர் அல்வாலீத் பின் தலால் உட்பட 381 பேர் லஞ்சம் மூலம் அளவுக்கு அதிகமாக சொத்துகள் சேர்த்து வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதனைத் தொடர்ந்து அவர்கள் கைது செய்ய்ப்பட்டு தி ரிட்ஸ் கட்லூன் என்ற சொகுசு விடுதியில் சிறை வைக்கப்பட்டிருந்தனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் சொகுசுவிடுதியின் தங்க வைக்கப்பட்டதனால் அந்த விடுதி சிறைச்சாலையாக செயற்பட்டது. இந்தநிலையில் கைது செய்யப்பட்டிருந்த இளவரசர் அல்வாலீத் பின் தலாலும் ஏனைய 325 பேரும் நிபந்தனையின் பேரில் விடுவிக்கப்பட்டதுடன் 56 பேர் மட்டும் வேறு சிறைக்கு மாற்றப்பட்டனர்.
அதைதொடர்ந்து அந்த விடுதி மீண்டும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே வருகிற 14ம் திகதி முதல் முன்பதிவு தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது