Home இலங்கைபதவி விலகுமாறு ஜனாதிபதி விடுத்த கோரிக்கையை ரணில் நிராகரித்தார்

பதவி விலகுமாறு ஜனாதிபதி விடுத்த கோரிக்கையை ரணில் நிராகரித்தார்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பிரதமர் பதவியை துறக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்த கோரிக்கையை, பிரதமர் ரணில் விக்ரமசிங்க நிராகரித்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் நேற்றைய தினம் இரவு   நீண்ட பேச்சுவார்த்தகள் நடத்தப்பட்டிருந்தன. எனினும் இந்தப் பேச்சுவார்த்தைகளில் எவ்வித இணக்கப்பாடும் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய தேசியக் கட்சியின் வேறு ஒருவரை பிரதமராக நியமிக்குமாறும், அவரை பதவி விலகுமாறும் ஜனாதிபதி, ரணிலிடம் கோரியுள்ளார். எனினும் இந்தக் கோரிக்கையை பிரதமர் ஏற்றுக்கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இன்றைய தினமும் பேச்சு;வார்த்தைகள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More