வாகனங்களின் விலைகள் உயர்த்தப்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலைகள் உயர்வடையக் கூடும் என தெரிவிக்கப்படுகிறது. ஜப்பானிய யென்னின் பெறுமதி 10 வீதத்தி;னால் உயர்வடைந்துள்ளமையே இதற்கான காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே வாகனங்களின் விலைகளை உயர்த்த நேரிடும் என வாகன இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. ஜப்பானிய யென் ஒன்றின் விற்பனை பெறுமதி 1.47 ரூபா எனத் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, 5 மில்லியன் ரூபா பெறுமதியான வாகனமொன்றின்விலை 50000 ரூபாவினால் உயர்வடையும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த விலை உயர்வு எதிர்வரும் காலங்களில் மேற்கொள்ளப்படும் வாகன இறக்குமதிகளுக்கே பொருந்தும் என தெரிவிக்கப்படுகிறது.
வாகனங்களின் விலைகள் உயர்த்தப்படக்கூடிய சாத்தியம்..
148
Spread the love