166
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்க பதவியை பதவிவிலகத் தீர்மானம் செய்துள்ளார். முகநூல் பதிவொன்றின் மூலம் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் நலனைக் கருத்திற் கொண்டு தாம் பதவிவிலகுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து தாம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அறிவித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். கட்சி எதிர்நோக்கி வரும் நெருக்கடி நிலையை கருத்திற் கொண்டு இவ்வாறான ஓர் தீர்மானம் எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
Spread the love