பஞ்சாப் நஷனல் வங்கியில் 11 ஆயிரத்து 500 கோடி ரூபா மோசடி செய்த விவகாரத்தில் தொழிலதிபரும், வைர வியாபாரியான நிரவ் மோடியின் வீடுகள், வர்த்தக நிறுவனங்களில் இன்று அமுலாக்கப்பிரிவு துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.
பஞ்சாப் நஷனல் வங்கியின் மும்பை கிளையில் மோசடிகள் நடைபெற்றிருந்தமை அண்மையில் வெளியே வந்தநிலையில் அந்த வங்கியில் சுமார் 280 கோடி ரூபாயினை ஏமாற்றியதாக நீரவ் மோடி, அவரின் மனைவி மற்றும் அவரது சகோதரர் மீது வங்கி சிபிஐயிடம் முறைப’பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்தநிலையில் இவர்கள் மீதும் வங்கியின் ஓய்வு பெற்ற இரு மேலாளர்கள் வழக்குப் பதிவு செய்துள்ள சிபிஐ முறைகேடான வழியில் பணம் பரிவர்த்தனை செய்ததில் பல கோடி முறைகேடு இடம்பெற்றிருந்தமையை கண்டுபிடித்திருந்தது.
இந்த சம்பவத்தையடுத்து பஞ்சாப் நஷனல் வங்கியில் பணியாற்றும் ஊழியர்கள் 10 பேரை இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் இன்று அமலாக்கப்பிரிவு துறையினர் நிரவ் மோடியின் அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங்கள், உள்ளிட்ட 10 இடங்களில் சோதனை நடத்தியுள்ளனர். எனினும் சோதனையில் கண்டுபிடிக்க விவரங்கள் குறித்து அமுலாக்கப்பிரிவினர் தகவல்கள் எதனையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.