Home இந்தியா தென்ஆபிரிக்காவுடனான போட்டியின் போது கோலி சாதனை

தென்ஆபிரிக்காவுடனான போட்டியின் போது கோலி சாதனை

by admin

தென்ஆபிரிக்காவுடனான 6 ஒருநாள் தொடரில் ஐந்து போட்டிகளின் முடிவில் இந்திய அணி 5-1 என தொடரை கைப்பற்றியுள்ளது. நேற்றையதினம் நடைபெற்ற இறுதி ஒருநாள் போட்டியின் போது இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியீட்டியிருந்தது. இப்போட்டியில் இந்திய அணித் தலைவர் விராட் கோலி 129 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். இது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அவரது 35-வது சதம் என்பதுடன் இந்த தொடரில் அவரது மூன்றாவது சதமாகும்.

இந்தநிலையில் நேற்றைய போட்டியில் அவர் 62 ஓட்டங்களை கடந்த பொழுது இருநாடுகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரில் அதிக ஓட்டங்கள் பெற்ற வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். ஆறு போட்டிகளில் விளையாடிய அவர் 558 ஓட்டங்கள் உலக சாதனை படைத்துள்ளார்.

முன்னதாக கடந்த 2013-14ல் இந்தியா – அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான ஏழு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய வீரர் ரோகித் சர்மா 491 ஓட்டங்கள் பெற்றிருந்தமையே அதிகபட்ச ஓட்டங்களாக இருந்த நிலையில் . கோலி அதனை தற்போது முறியடித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More