குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவியில் இருந்து நீக்கும் நோக்கிலான வியூகம் ஒன்றை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வகுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவியை விட்டு விலகாவிட்டால் மாற்று வழியில் அவரை பதவியிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். அமைச்சரைவயை கலைப்பதன் மூலம் பிரதமரை பதவி நீக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் சாசனத்தின் 46(2) அ பிரிவு சரத்தில் இந்த விடயம் பற்றி பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அமைச்சரவையை கலைத்தால் அதன் ஊடாக பிரதமரின் பதவியும் ரத்தாகிவிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார். தேசிய அரசாங்கம் குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கையும் கலாவதியாகியுள்ள நிலையில் தற்போதைய அமைச்சரவை சட்ட ரீதியான அந்தஸ்தை இழந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.