Home இலங்கைசாவகச்சேரியில் பட்டம் ஏற்றிய சிறுவன் கிணற்றில் தவறி விழுந்து மரணம்

சாவகச்சேரியில் பட்டம் ஏற்றிய சிறுவன் கிணற்றில் தவறி விழுந்து மரணம்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யாழ். சாவகச்சேரி கல்வயல் பகுதியில் பட்டம் ஏற்றிக்கொண்டிருந்த 16 வயது சிறுவன் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

 அப்பகுதியை சேர்ந்த ஜெயகுமாரன் தீசன் எனும் சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக சாவகச்சேரி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பட்டம் ஏற்றிக்கொண்டு பின்பக்கமாக ஒட்டிய போதே சிறுவன் கிணற்றில் விழுந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

 உயிரிழந்த சிறுவனின் சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

 இச்சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More