குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக குற்றப் பிரேரணை ஒன்றை கொண்டு வருவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது என கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஏதேனும் ஓர் காரணத்த;ற்காக ஜனாதிபதி, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவியிலிருந்து நீக்கியிருந்தால் குற்றப் பிரேரணை மூலம் ஜனாதிபதியை பதவி நீக்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி திட்டமிட்டிருந்தது என தெரிவிக்கப்படுகிறது.
பிரதமர் ரணில் பதவி விலக்கப்பட்டிருந்தால் நீதிமன்றின் உதவியை நாடுவதற்கும் கட்சி தீர்மானித்திருந்தது என தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதிக்கு இந்த தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமக்கு எதிராக இவ்வாறான ஓர் முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது என்பது குறித்து ஜனாதிபதி, சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுடான சந்திப்பின் போது நேற்று கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது