ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (22) முற்பகல் பாராளுமன்றத்திற்கு சென்றுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் முன்னாள் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான காலம்சென்ற பேராசிரியர் விஷ்வா வர்ணபாலவுக்கான அனுதாபப் பிரேரணை இன்று பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், பாராளுமன்றத்திற்கு சென்ற ஜனாதிபதி அவர்கள் அந்த விவாதத்தில் கலந்துகொண்டார்.
இங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அரசியல்வாதி என்ற வகையில் மட்டுமன்றி கல்விமான் என்றவகையிலும் தனக்கு வழங்கப்பட்ட அனைத்து பொறுப்புக்களிலும் அரசியல் கட்சி பேதமின்றி தனது பொறுப்புக்களை நிறைவேற்றிய பேராசிரியர் விஷ்வா வர்ணபால சமூகத்தில் சிறந்த கல்விமானாகவும் மனிதாபிமானமிக்க ஒருவராகவும் அறியப்பட்டிருந்தார்.
அவர் இந்நாட்டின் அனைத்து அரசியல்வாதிகளுக்கும் முன்மாதிரியாவார் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி அரசியலுடன் பின்னால் வரும் ஊழல் மோசடிகளை எதிர்த்த அரசியல்வாதி என்ற வகையில் அவர் மக்கள் மத்தியில் உயர்ந்த அங்கீகாரத்தை பெற்றிருந்தார் என்றும் தெரிவித்தார்.