இந்தியாவில் பத்திரிகையாளர்கள் மற்றும் மனித உரிமைப் ஆர்வலர்கள் ஆகியோர் கொல்லப்பட்டுள்ளதுடன் பல்கலைக் கழகங்களில் கருத்து, பேச்சு சுதந்திரங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது எனவும் சர்வதேச மன்னிப்பு சபை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது
2017-ல் மனித உரிமை ஆர்வலர்கள் மீது இந்திய அரசினைச் சேர்ந்தவர்கள் வெளிப்படையாக தாக்கிப்பேசி உள்ளனர் எனவும் இவர்களுக்கு எதிராக பகைமையையும் வன்முறையையும் இந்திய அதிகார வர்க்கம் ஊட்டி வளர்த்து வருகிறது எனவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் கருத்துச் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம் சட்டங்கள் மூலம் நசுக்கப்பட்டு வருவதாகவும் பத்திரிகையாளர்கள் மீதும் பத்திரிகைச் சுதந்திரம் மீதும் தொடர்ந்து தாக்குதல் நடைபெற்று வருகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தெற்காசியா முழுதுமே சிறுபான்மையினர் மீது வன்முறைக் கும்பல் தாக்குதல் நடத்துவது அதிகரித்து வருகிறது எனவும் இதனை அரசுகள் தடுப்பதில்லை எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன் இந்தியா முழுதும் முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்புக் குற்றங்கள் நடந்துள்ளன எனவும் பசுக்குண்டர்களால் குறைந்தது 10 முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் சிலர் காயமடைந்துள்ளனர் எனவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது