இந்தியா பிரதான செய்திகள்

உடலுறுப்புக்களின் விற்பனைக்காக கருணை இல்லத்தின் பெயரில் முதியோரை பலி எடுக்கும் செயின்ட் ஜோசப் முதியோர் இல்லம்

காஞ்சிபுரம் மாவட்டம் பாலேஸ்வரத்தில் உள்ள சர்ச்சைக்குள்ளான செயின்ட் ஜோசப் கருணை இல்லத்தில் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செயின்ட் ஜோசப் என்ற பெயரில் இயங்கிவரும் இந்த கருணை இல்லத்தில் அதிகமான ஆதரவற்ற முதியோர் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இங்கு நாள்தோறும் முதியவர்கள் உயிரிழப்பதாகவும் அவர்களின் எலும்புக்கூடுகள் வெளிநாட்டிற்கு கடத்தப்படுவதாகவும் தகவல் வெளியானது. மேலும் அண்மையில் கருணை இல்லத்துக்கு சொந்தமான போலி அம்புலன்ஸில் கடத்தப்பட்ட மூதாட்டி ஒருவர் வாகனத்தில் சடலம் ஒன்று இருப்பதைக் கண்டு காப்பாற்றுமாறு கூச்சலிட்டதனை அடுத்து வாகனத்தை மடக்கிப்பிடித்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறையினர் காய்கறி மூட்டைகளுடன் கடத்தப்பட்ட உடலை கைப்பற்றியதோடு உயிருடன் இருந்த மேலும் ஒரு முதியவரையும் காப்பாற்றினர். கடந்த 3 மாதங்களில் மட்டும் அந்த முதியோர் இல்லத்தில் 300க்கும் மேற்பட்டோர் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பதாக தெரிவித்த அப்பகுதி மக்கள் அவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்படாமல் அங்குள்ள சுவற்றில் உள்ள அறைகளில் வைத்து பதப்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தனர்.

மேலும் உயிரிப்பவர்களின் எலும்புக்கூடுகள் வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதகாவும் குற்றம்சாட்டினர். இதனையடுத்து கருணை இல்ல நிர்வாகி தோமஸிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நாள்தோறும் 2 பேர் சராசரியாக உயிரிழப்பதாக தெரிவித்துள்ளார்.

எனினும்; உயிரிழந்தவர்கள் குறித்து கருணை இல்லம் பதிவு செய்யவில்லை என தெரியவந்துள்ளநிலையில் அங்கு ஏதோ சட்டவிரோத செயற்பாடு நடைபெறுகின்றது என்பதனை உறுதிய மத்திய உளவுத்துறை அதிகாரிகள் அங்கு ஆய்வு நடத்தி வருகின்றனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் நிலையில் கருணை இல்லம் குறித்த பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என தெரிவிக்கப்படுகின்றது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.