நேற்று கேரளாவில் இன்று தமிழகத்தில்!
தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தின் அரகண்டநல்லூர் காவற்துறை பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் நேற்று, தாழ்த்தப்பட்ட பகுதியினரை சேர்ந்த எட்டு வயது சிறுவன் இனம்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டதில் உயிரிழந்துள்ளார்.
14 செண்ட் நிலத்திற்காக தலித் சமூகத்தைச் சேர்ந்த சிறுவனை அடித்துக் கொன்றுவிட்டு, மகளான 14 வயது சிறுமியை பாலியல் வல்லுறவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை இப் பகுதியில் தொடர்ந்தும் சாதிவெறி வன்முறைகள் இடம்பெறுவதாகவும் கூறப்படுகின்றது.
அவனது சகோதரியும், தாயாரும் கொலை செய்யப்படும் நோக்கில் தாக்கப்பட்ட நிலையில் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கணவனை இழந்த 45 பெண் தன்னுடைய மகன் மற்றும் மகளுடன் வேலம்புத்தூர் கிராமத்தில் வசித்து வந்துள்ளார். இவரின் மற்ற 4 பிள்ளைகள் பெங்களூரு மற்றும திருப்பூரில் வேலை செய்து வருகின்றனர்.
இவர்களின் தந்தை 4 ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்த நிலையில் 4 பேரும் வெளியூர்களில் வேலை செய்து தாய்க்கு பணம் அனுப்பி வருகின்றனர். தாயுடன் வசிக்கும் சிறுமி டி தேவனூரில் உள்ள அரசுப் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். மற்றொரு மகன் வேலம்புதூரில் உள்ள அரசுப் பள்ளியில் 4ம் வகுப்பு பயின்று வருகிறார்.
நேற்று இரவு இவர்களின் வீட்டில் இருந்து அழுகுரல் கேட்டுள்ளது. அப்போது அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் சென்று பார்த்த போது உடல் முழுதும் காயங்களுடன் 8 வயது சிறுவன் இறந்து கிடந்துள்ளான். சிறுமியும், அவரது தாயாரும் காயங்களுடன் கிடந்தனர்.
சிறுமி ஆடைகளின்றி இருந்ததை வைத்து அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதனையடுத்து உள்ளூர் மக்கள் அரகண்டநல்லூர் காவல்துறையினருக்கு அளித்த புகாரின் அடிப்படையில் காவற்துறையினர் சென்று சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.