Home இலங்கைஅமைச்சரவை மாற்றத்தில் எவ்வித பயனும் கிடையாது

அமைச்சரவை மாற்றத்தில் எவ்வித பயனும் கிடையாது

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..


அமைச்சரவை மாற்றத்தில் எவ்வித பயனும் கிடையாது என முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். மக்கள் எதனை எதிர்பார்த்தார்களோ அந்த தேவை பூர்த்தி செய்யப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் சில அமைச்சர்களுக்கு இடையில் அமைச்சுப் பதவிகள் மாற்றம் செய்யப்படுவதனை மக்கள் எதிர்பார்க்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார். உண்மையில் அமைச்சரவை மாற்றமானது நகைப்பிற்குரியதும், கண்துடைப்பு நாடகமாகவுமே நோக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். மக்களின் விருப்பு வெறுப்புக்களை புரிந்து கொண்டு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டிருக்கு வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More