குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நப்ரா (NAFTA ) உடன்படிக்கை தொடர்பில் மீளவும் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட உள்ளன. மெக்ஸிக்கோவும், கனடாவும் மீளவும் இந்த உடன்படிக்கை தொடர்பில் பேசப்படாத விடயங்களை பேசி அமெரிக்காவுடன் இணைக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ளும் முனைப்புக்களில் ஈடுபட்டுள்ளன. கடந்த ஆறு மாத காலமாக நப்ரா உடன்படிக்கை தொடர்பில் அமெரிக்கா, மெக்ஸிக்கோ மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்ப் நிர்வாகம் கடுமையான நிபந்தனைகளை முன்வைத்த காரணத்தினால் பேச்சுவார்த்தைகளில் பெரியளவில் முன்னேற்றம் பதிவாகவில்லை. இந்தநிலையில் தொழில்நுட்ப மற்றும் ஏனைய முக்கிய விடயங்கள் தொடர்பில் அடுத்து வரும் பேச்சுவார்த்தைகளில் கவனம் செலுத்தப்பட உள்ளதாக மெக்ஸிக்கோ மற்றும் கனடா ஆகிய நாடுகள் தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.