குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா சட்டம் ஒழுங்கு அமைச்சராக நியமிக்கப்பட உள்ளார். இரண்டு வார கால அவகாசத்தில் சரத் பொன்சேகா இவ்வாறு சட்டம் ஒழுங்கு அமைச்சராக நியமிக்கப்பட உள்ளார். காவல்துறையின் உயர் அதிகாரிகள் பலர் இந்த நியமனத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டு வருகின்ற நிலையில் சரத் பொன்சேகா இவ்வாறு சட்டம் ஒழுங்கு அமைச்சராக நியமிக்கப்பட உள்ளார் என சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க இரண்டு வாரங்களுக்கு மட்டுமே சட்டம் ஒழுங்கு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். சிரேஸ்ட காவல்துறை உத்தியோகத்தர்கள் விரும்பாத போதிலும் கடைநிலை காவல்துறை உத்தியோகத்தர்கள் சரத் பொன்சேகாவே சட்டம் ஒழுங்குத் துறை அமைச்சிற்கு பொருத்தமானவர் என கருதுகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சட்டம் ஒழுங்கு அமைச்சர் ஸ்திரமான நிலைப்பாட்டைக் கொண்ட ஒருவராக இருக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.