Home இலங்கையாழில் கஞ்சாவுடன் பெண் கைது

யாழில் கஞ்சாவுடன் பெண் கைது

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் கஞ்சா போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சாவகச்சேரி காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொண்ட சோதனையின் போதே குறித்த பெண் கைது செய்யப்பட்டதாகவும் சந்தேகநபரிடமிருந்து 200 கிராம் கஞ்சா போதைப்பொருளை கைப்பற்றியதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட பெண் நாவற்குழி பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவர் என மேலதிக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. கைதுசெய்யப்பட்ட குறித்த பெண் சந்தேக நபரை, சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துவருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More