Home இலங்கைகாணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக உறுப்பினர்களை ஜனாதிபதி நியமித்தார்..

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக உறுப்பினர்களை ஜனாதிபதி நியமித்தார்..

by admin

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.  நேற்றையதினம் நிமிக்கப்பட்ட இந்த காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் தலைவராக சாலிய பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் ஜெயதீபா புன்னியமூர்த்தி, மேஜர் ஜெனரல் மொஹட்டி பீரிஸ், சிரியானி நிமல்கா பெர்னாண்டோ, மிராக் ரஹீம், சோமசிறி லியனகே மற்றும் கணபதிபிள்ளை வேந்தன் ஆகிய ஆறு பேரும் பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

காணாமல்போனோர் தொடர்பான அலுவலக சட்டமானது கடந்த 2016 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நிறைவேற்றப்பட்ட போதும், குறித்த அலுவலகம் தற்போதே நிறுவப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக தமது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More