புனித ஜோசப் கருணை இல்லத்துக்கு அதிகாரிகள் சீல் வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஓரு வருடமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் தோமஸ் என்பவரின் பராமரிப்பில் இயங்கி வருவதாகக் கூறப்படுகின்ற இந்த கருணை இல்லத்தில் இடம்பெற்ற சம்பவங்களை அடுத்து சீல் வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு இடங்களைச் சேர்ந்த பலர் தங்கியிருந்த நிலையில் அவர்களை சரியாக பரிமாரிக்கவில்லை எனத் தெரிவித்து, இந்து முன்னணியினர் நேற்று முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் கருணை இல்லம் என்ற பெயரில் செயல்படும் விடுதிகளை ஆய்வு செய்ய வேண்டும் என மனுவினை கையளித்தனர்.
இதையடுத்து, 2-வது நாளாக அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் அந்த இல்லம் உரிய அனுமதி இல்லாமல் செயல்படுவது தெரியவந்ததையடுத்து, விசாரணை மேற்கொள்ளப்பட்டதுடன் அங்கிருந்த 13 பேர் மீட்கப்பட்டு அரசு காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதையடுத்து, அனுமதியில்லாமல் செயல்பட்ட புனித கருணை இல்லத்தை பூட்டி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். அங்கிருந்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், விரிவான விசாரணை விரைவில் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.