பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் நெய்மருக்கு 3 மாத கால ஓய்வில் உள்ளார். அவருக்கு காலில் மேற்கொள்ளப்படவுள்ள சத்திரசிக்சையின் பொருட்டே இவர் இவ்வாறு 3 மாத காலத்து விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பிரான்சின் பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் கிளப் அணிக்காக விளையாடி வருகின்ற 26 வயதான நெய்மர் சில தினங்களுக்கு முன்பு, லிக்யூ தொடரில் விளையாடும் போது கால்பாதத்தின் மேல்பகுதியில் எலும்பு முறிவுக்குள்ளாகியிருந்தார்.
எதிர்வரும் 6ம் திகதி நடைபெறவுள்ள சம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் முக்கியமான போட்டியான பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் மற்றும் ரியல்மாட் அணிகளுக்கிடையிலான போட்டியில நெய்மர் விளையாட முடியாத நிலை ஏற்பட்டிருப்பதால், அது பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்கு பெரும் பின்னடைவாக அமையும் என தெரிவிக்கப்படுகின்றது