குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் எதிர்வரும் 8ம் திகதிக்கு முன்னதாக குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாக வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. கோட்டை நீதவான் நீதிமன்ற நீதவான் லங்கா ஜயரட்ன இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார். எதிர்வரும் 8ம் திகதி அர்ஜூன லக்ஸ்மன் மகேந்திரன் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகத் தவறினால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அழைப்பாணை உத்தரவினை சிங்கப்பூரில் காணப்படும் அர்ஜூன் மகேந்திரனின் இல்லத்தில் கொடுக்க முடியவில்லை என நீதிமன்றில் அறிவிக்பப்பட்டுள்ளது. அர்ஜூன் மகேந்திரனின் தொலைபேசி இலக்கத்துடன் கூரியர் சேவை நிறுவனம் தொடர்பு கொண்டதாகவும் இதன் போது லக்ஸ்மன் என்ற ஒரு நபர் பதிலளித்ததாகவும், 30ம் திகதி தாம் சிங்கப்பூர் திரும்புவதாகவும் கூறினார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.