Home இலங்கைராஜாங்கனையில் கைது செய்யப்பட்ட விவசாயிகளை விடுவிக்க வேண்டும்…

ராஜாங்கனையில் கைது செய்யப்பட்ட விவசாயிகளை விடுவிக்க வேண்டும்…

by admin

ராஜாங்கனையில் கைது செய்யப்பட்ட விவசாயிகளை விரைவில் விடுவிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார். அத்துடன் விவசாயிகள் மீதான தாக்குதலுக்கு தற்போதைய அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தெரிவித்துள்ளார்.

ராஜாங்கனை நீர்த்தேக்கத்தில் குடிநீர் திட்டத்தை பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் 50 பேர் கைது செய்யப்பட்டு இம்மாதம் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் அருகே ஆரம்பிக்கப்படவுள்ள நீர்வழங்கல் திட்டத்தை மீளாய்வு செய்ய எதிர்பார்ப்பதாக அனுராதபுர மாவட்ட செயலாளர் ஆர்.எம். வன்னிநாயக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More