155
மட்டக்களப்பு வெல்லாவெளிக் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட செல்வாபுரம் கிராமத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட மோதலில் குடும்பத் தலைவர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக வெல்லாவெளிக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். செல்வாபுரம் – இரண்டாம் வட்டாரத்தைச் சேர்ந்த 49 வயதான மயில்வாகனம் கமலேஸ்வரன் என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் அதே கிராமத்தைச் சேர்ந்த 24 வயதுடைய கேதீஸ்வரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் சம்பவம் தொடர்பான விசாரணைகள் இடம்பெபற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Spread the love