மேற்கிந்தியத்தீவுகள் உள்பட 10 அணிகள் பங்கேற்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று நாளை சிம்பாப்வேயில் ஆரம்பமாகவுள்ளது. 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த வருடம் இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது.
ஒரு நாள் போட்டி அணிகளின் தரவரிசையில் முதல் 8 இடங்களில உள்ள தென்ஆபிரிக்கா, நியூசிலாந்து, இந்தியா, அவுஸ்திரேலியா, இலங்கை, பங்களாதேஸ், பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து ஆகிய 8 அணிகள் நேரடியாக உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றன.
இந்தநிலையில் ஏனைய 3 அணிகளும் தகுதிப் போட்யின் அடிப்படையில் தெரிவு செய்யப்படவுள்ளன. இந்தப் தகுதிச்சுற்றுப் போட்டி நாளை ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகி 25ம் திகதி வரை நடைபெறஉள்ளது.
தகுதி சுற்றில் போட்டியிடும் 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு போட்டிகள் இடம்பெறவுள்ளன. இறுதியில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டி முன்னேறுவதுடன், உலக கோப்பை போட்டிக்கும் தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது