குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
இறுதிக் கட்ட யுத்தத்தை நேரில் பார்வையிட்ட சாட்சியொருவரின் அறிக்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. வட மாகாண சபை உறுப்பினர் எஸ்.குகதாஸ் கடந்த வாரம் வட மாகாண சபையில் நிகழ்த்திய அவரது முதலாவது உரையில் இறுதிக் கட்ட யுத்தம் பற்றிய விடயங்கனைக் குறிப்பிட்டு இருந்தார்.
யுத்தம் தொடர்பில் பேசப்பட்ட இந்த உரையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளுக்கு அனுப்பி வைக்குமாறு முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் கோரியிருந்தார். இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட வட மாகாணசபை, உரையை ஜெனீவாவிற்கு அனுப்பி வைக்க உள்ளது. யுத்தத்தின் போது பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பொதுமக்களும் கொல்லப்பட்டதாக குகதாஸ் தெரிவித்துள்ளார்.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது 500,000 பொதுமக்கள் வடக்கில் இருந்தனர் எனவும், 300,000 பேர் மட்டுமே தப்பித்தனர் எனவும் ஏனையவர்கள் உயிரிழந்திருக்கலாம் எனவும் அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது