168
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சட்டம் ஒழுங்கு அமைச்சரின் பலவீனமே நாட்டின் தற்போதைய நிலைமைக்கான காரணம் என முன்னாள் வெளிவிவகார அமைச்சரும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளருமான ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அம்பாறை, திகன போன்ற பிரதேசங்களில் இடம்பெற்ற சம்பவங்களுக்கு சட்டம் ஒழுங்கு அமைச்சரே பொறுப்புபேற்றுக் கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி சட்டம் ஒழுங்கு அமைச்சர் ஒருவரை நியமிக்க திராணியற்றிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரம் பாரியளவில் வீழ்ச்சியடைந்தமைக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே பொறுப்பு சொல்ல வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Spread the love