Home சினிமாடப்பிங் பேசி முடித்தார் காலாவின் வில்லன் நானா படேகர் :

டப்பிங் பேசி முடித்தார் காலாவின் வில்லன் நானா படேகர் :

by admin


ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள காலா படத்தில் நடித்துள்ள நானா படேகர், தனக்கான தமிழ் மற்றும் ஹிந்தி டப்பிங் பணிகளை இன்று முடித்துள்ளமை இந்தத் திரைப்படத்தின் பணிகளை நிறைவுக் கட்டத்திற்கு நகர்த்தியுள்ளதாக காலா படக் குழு தெரிவித்துள்ளது.

மெட்ராஸ் படத்தின் இயக்குனர் ரஞ்சித் இயக்கிய ‘கபாலி’ படம் பெரும் வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பா.இரஞ்சித் ஆகியோர் இணைந்து ‘காலா’ படத்தை உருவாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இப்படத்தினை நடிகர் தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்.

அத்துடன் லைகா புரொடக்க்ஷன்ஸ் இந்த படத்தினை வெளியிடுகின்றது. சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கும் இப்படத்தில் சமுத்திரகனி, நானா படேகர், அஞ்சலி படேல், சம்பத், சாயாஜி ஷிண்டே, அருள்தாஸ், ஹூமா குரேஷி, வத்திக்குச்சி திலீபன், அரவிந்த் ஆகாஷ், சுதான்ஷூ பாண்டே, ஈஸ்வரிராவ், சாக்ஷி அகர்வால் எனப் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

சமீபத்தில் வெளியான  இப்படத்தின் டீசர் ரசிகர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் காலா படத்தில் முக்கிய கதாபாத்திரமாக வில்லன் வேடத்தில் நடித்திருந்த பாலிவுட் நடிகர் நானா படேகர் அவருக்கான தமிழ் மற்றும் ஹிந்தி டப்பிங் பணியை இன்று நிறைவுபடுத்தியுள்ளார். இத்திரைப்படம் ஏப்ரல் 27 ஆம்  திகதி உலகெங்கிலும் வெளியாகின்றது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More