Home உலகம்ஐபில் ஏலத்தில் எடுக்காதமை ஏமாற்றமளிக்கின்றது – ஜோ ரூட்

ஐபில் ஏலத்தில் எடுக்காதமை ஏமாற்றமளிக்கின்றது – ஜோ ரூட்

by admin


இங்கிலாந்து அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரரான ஜோ ரூட் தன்னை ஐபில் ஏலத்தில் எந்த அணிகளும் எடுக்காதமை குறித்து ஏமாற்றமளிப்பதாக கவலை வெளியிட்டுள்ளார். கடந்த ஜனவரி மாதம் ஐபிஎல் சீசன் 2018-க்கான வீரர்கள் ஏலம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் ஜோ ரூட்டை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை. இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும் ஜோ ரூட் ஐபிஎல் தொடரில் விளையாடுவதை விரும்பவில்லை.

இந்நிலையில் புகழ்பெற்ற ஐபிஎல் தொடரில் இடம்பெறாதமை ஏமாற்றம் அளிக்கிறது அவர் தெரிவித்துள்ளார். தான் இந்தியா சென்று ஏராளமான இருபதுக்கு இருபது போட்டிகளில் விளையாட விரும்பியதாக தெரிவித்த அவர்   எந்தவொரு ஐபிஎல் அணிக்கும் சரியான நபராக தான் இருக்கவில்லை என்பது  ஏமாற்றம் அளிக்கின்றது எனவும் இதனை தன்னால் புரிந்து கொள்ளமுடியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More