குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வன்முறைச் சம்பவங்களுடன் தம்மை பொய்யாக தொடர்புபடுத்துவதாக பொதுபல சேனா இயக்கம் தெரிவித்துள்ளது. அப்பாவி முஸ்லிம்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் தாக்குதல்களுடன் தமது அமைப்பினை தொடர்புபடுத்துவதாக பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சம்பவம் ஒன்று இடம்பெற்றால் அதனுடன் பொதுபல சேனாவை சிலர் தொடர்புபடுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.
தாம் கண்டிக்கு சென்று மக்களை அமைதிப்படுத்துவதற்கு முயற்சித்ததாகத் தெரிவித்துள்ளார். பொதுபல சேனா இயக்கம் வழிமுறைகளை மாற்றிக்கொண்டுள்ளதாகவும் இனங்களுக்கு இடையில் சகோதரத்துவத்தை வளர்க்க வேண்டுமென விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சில முஸ்லிம் அமைப்புக்களின் செயற்பாடுகள் குறித்து கரிசனை கொண்ட போதிலும், வன்முறைகளின் மூலம் தீர்வு காண விரும்பவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.