இந்தியாவில் குழந்தைகள் திருமணம் வெகுவாக குறைந்துள்ளதாக யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள யுனிசெப் இந்தியாவில் குழந்தை திருமணங்கள் 47 சதவீதத்தில் இருந்து 27 சதவீதமாக குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் உலக அளவில் 2.5 கோடி குழந்தை திருமணங்கள் நடைபெற்றுள்ளன எனவும் தற்போது குறிப்பாக தெற்கு ஆசிய நாடுகளில் இந்தப் பழக்கம் குறைந்துள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
பெண் குழந்தைகளின் கல்வியில் முன்னேற்றம், வளர் இளம்பருவத்திலுள்ள பெண் குழந்தைகளுக்காக அரசு நிறைவேற்றி வரும் திட்டங்கள், குழந்தை திருமணத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் போன்றவற்றால் இந்தியாவில் குழந்தைத் திருமணங்கள் குறைந்துள்ளன எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த விஷயத்தில் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது எடினவும் அனைத்து பெண் குழந்தை திருமணங்களையும் தடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது