இலங்கை பிரதான செய்திகள் விளையாட்டு

மீண்டும் ஒர் சிவில் யுத்தம் ஏற்படுவதனை விரும்பவில்லை – மஹல ஜயவர்தன


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மீண்டும் நாட்டில் ஓர் சிவில் யுத்தம் ஏற்படுவதனை விரும்பவில்லை என இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் மஹல ஜயவர்தன தெரிவித்துள்ளார். அண்மையில் இலங்கையில் இடம்பெற்று வரும் வன்முறைகள் தொடர்பில் மஹல ஜயவர்தன பதிவிட்ட டுவிட்டரில் பதிவிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

வன்முறைகள் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியவை என குறிப்பிட்டுள்ள அவர் தாம் வளர்ந்த 25 ஆண்டுகளாக சிவில் யுத்தம் நாட்டில் நீடித்தது எனவும், அடுத்த தலைமுறையினரையும் சிவில் யுத்தம் பாதிக்கக் கூடாது எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.  வன்முறைகளில் ஈடுபட்ட அனைவரும் தராதரம் பாராது நீதியின் முன் நிலைநிறுத்தப்பட வேண்டுமெனவும் மஹல ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.