Home இலங்கைஇலங்கை அசாதாரண சூழ்நிலை குறித்து ஐ.நா கவலை

இலங்கை அசாதாரண சூழ்நிலை குறித்து ஐ.நா கவலை

by admin

இலங்கையில் நிலவும் அசாதாரண சூழ்நிலை குறித்து கவலையடைவதாக ஐ.நா சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பானது, இலங்கையில்   இடம்பெற்றும் இன வன்முறைகள் குறித்து வருத்தமடைவதுடன் வன்மையாகக் கண்டனமும் தெரிவிப்பதாக அற்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

உடனடியாக வன்முறைகளுக்கு காரணமானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நாட்டில் இயல்பு நிலையை கொண்டுவருவதற்கு பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் நாட்டில் சட்ட ஒழுங்கை நிலைநிறுத்துமாறும், மனித உரிமைகளையும், அனைவருக்குமான பாதுகாப்பையும் உறுதி செய்யுமாறும் அரசாங்கத்தினையும் பொது மக்களையும் வேண்டி நிற்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More