குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கையில் சமூக ஊடக வலையமைப்புக்கள் தற்காலிக அடிப்படையில் முடக்கப்பட்டுள்ளது. கண்டியில் இடம்பெற்ற இன வன்முறைகளைத் தொடர்ந்து இவ்வாறு தற்காலிக அடிப்படையில் முகநூல், டுவிட்டர், வட்ஸ்அப், வைபர் உள்ளிட்டனவற்றின் சேவைகள் முடக்கப்பட்டும் தாமதப்படுத்தப்பட்டும் காணப்படுகின்றது. குரோத உணர்வைத் தடுக்கும் நோக்கில் இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளது.
மறு அறிவித்தல் வரையில் சமூக ஊடக வலையமைப்புக்கள் தொடர்பில் சில வரையறைளை விதிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களுக்கு எதிரான குரோத உணர்வுகளைத் தூண்டும் வகையில் சில சிங்கள பௌத்த இனவாத தரப்பினர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது