171
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
போலிப் பிரச்சாரம் மேற்கொள்வோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. அமைச்சரவையின் இணைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். சமூக ஊடக வலையமைப்புக்களின் ஊடாக குரோத உணர்வுகளையும் போலிப் பிரச்சாரங்களையும் சிலர் முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Spread the love