Home இலங்கைசங்கா, சனத் வன்முறைச் சம்பவங்களுக்கு கண்டனம்

சங்கா, சனத் வன்முறைச் சம்பவங்களுக்கு கண்டனம்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களை வன்மையாகக் கண்டிப்பதாக பிரபல கிரிக்கட் வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் சனத் ஜயசூரிய ஆகியோர் அறிவித்துள்ளனர். மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து வலுவாக இருக்க வேண்டிய தருணம் இதுவெனத் தெரிவித்துள்ளனர். டுவிட்டர் மூலம் இருவரும் இவ்வாறு கருத்துரைத்துள்ளனர்.

இன அல்லது மதத்தின் அடிப்படையில் எவரும் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்பட இடமளிக்கப்பட முடியாது என சுட்டிக்காட்டியுள்ளனர். ஒரே நாடு , ஒரே மக்கள் என்ற எண்ணக்கருவுடன் அன்புடனும் நம்பிக்கையுடனும் முன்னோக்கி நகர்வோம் எனவும், வன்முறைகள் மற்றும் இனவாதத்திற்கு இடமில்லை எனவும் தெரிவித்துள்ளனர். புத்தி சாதூரியமாகவும், ஒற்றுமையுடனும் நடந்துகொள்ள வேண்டிய தருணம் இதுவெனத் தெரிவித்துள்ளனர்.  வன்முறைகள் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியவை என தெரிவித்துள்ளனர்.

 

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More