உலகின் பல முன்னணி வங்கிகள் மற்றும் காப்புறுதி நிறுவனங்கள் அணு ஆயுதங்களை தயாரிக்கும் நிறுவனங்களில் கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 525 பில்லியன் டொலர்களை முதலீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பன்னாட்டு அணு ஆயுத ஒழிப்பு பிரசார குழு அண்மையில் வெளியிட்ட தகவலின் படி 24 நாடுகளை சேர்ந்த சுமார் 329 வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் உட்பட பல்வேறு நிறுவனங்கள் இந்தியா, பிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் அமெரிக்காவில் உள்ள 20 வேறுவேறு அணு ஆயுத உற்பத்தி நிறுவனங்களில் மூதலீடு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் கடந்த 2014-ம் ஆண்டிற்கு பின்னர் சுமார் 525 பில்லியன் அமெரிக்க டொலர் அளவிற்கு இந்நிறுவனங்கள் அணு ஆயுதங்களை தயாரிக்கும் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாகவும் அமெரிக்காவை சேர்ந்த 3 நிறுவனங்கள் மட்டும் சுமார் 110 பில்லியன் அமெரிக்க டொலர் அளவிற்கு முதலீடு செய்துள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.