குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
எதிர்க்கட்சிகள் மீது குற்றம் சுமத்தக் கூடாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அண்மையில் கண்டியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில், எதிர்க்கட்சிகள் மீது குற்றம் சுமத்துவதில் பயனில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற வன்முறைகளுக்கு எதிர்க்கட்சிகளே காரணம் என பெய்க்குற்றச்சாட்டு சுமத்தாது, இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். தாம் உள்ளிட்ட கூட்டு எதிர்க்கட்சியினர் இந்த சம்பவத்தின் போது அரசாங்கத்திற்கு பூரண அளவில் ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் அரசியல் கட்சிகள், காவல்துறையினர் மீது குற்றம் சுமத்தாது அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்பை பெற்றுக்கொண்டு சிங்கள முஸ்லிம் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
30 ஆண்டு கால யுத்தத்தை பூர்த்தி செய்த அரச தலைவர் என்ற ரீதியில், பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்த வேண்டாம் என அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.