இலங்கை பிரதான செய்திகள்

கண்டி சம்பவம் புதிய சர்வதேச சவால்களை உருவாக்கியுள்ளது


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கண்டி சம்பவம் புதிய சர்வதேச சவால்களை உருவாக்கியுள்ளதாக பிரதமர் ரணில்விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் உள்நாட்டு ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் பெரும் சவால்களை உருவாக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். வரட்சி காரணமாக நாட்டின் விவசாயிகள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி உள்ளதாகவும் இது குறித்த சவால்களையே அரசாங்கம் முதன்மை சவாலாக கருதியதாகவும் குறிப்பிட்டுள்ள அவர் தற்பொழுது கண்டி சம்பவமும் பாரிய சவால்களை ஏற்படுத்தியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற சம்பவங்களின் காரணமாக சுற்றுலாத்துறையில் அபிவிருத்தியை எதிர்பார்க்க முடியுமா என்பது சந்தேகமே என அவர் குறிப்பிட்டுள்ளார். கண்டியில் இடம்பெற்ற சேத விபரங்கள் குறித்து ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பாதிக்கப்பட்டோருக்கு நட்டஈடு வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

1 Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

  • Yes this is true. There would be a drastic decline of tourist arrivals in our land would be envisaged. May God bless our mother Sri Lanka.