Home இலங்கைசுற்றாடல் பாதுகாப்பு குறித்து ஜனாதிபதி எரிக் சொல்ஹெய்முடன் பேச்சுவார்த்தை…

சுற்றாடல் பாதுகாப்பு குறித்து ஜனாதிபதி எரிக் சொல்ஹெய்முடன் பேச்சுவார்த்தை…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய நாடுகள் அமைப்பின் சுற்றாடல் நிகழ்ச்சியின் நிறைவேற்றுப் பணிப்பாளர், எரிக் சொல்ஹெய்முடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். கட்டிட நிர்மானப் பணிகளுக்காக அதிகளவில் மண் மற்றும் மணல் அகழ்வுகளில் ஈடுபடுவதற்கு மாற்று வழிகளை பயன்படுத்துவது குறித்து ஜனாதிபதி, ஆலோசனை வழங்குமாறு சொல்ஹெய்மிடம் கோரியுள்ளார். டெல்லியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது ஜனாதிபதி, சொல்ஹெய்மை சந்தித்துள்ளார். யுத்தம் இடம்பெற்ற காலத்தில் அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான விசேட சமாதான ஏற்பாட்டாளராக சொல்ஹெய்ம் கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More