குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மத்திய கிழக்கு நாடுகளுடன் பகைமை ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். இனவாத அடிப்படையில் இலங்கையில் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டால், மத்திய கிழக்கு நாடுகளில் இலங்கையர்களுக்கு வழங்கப்படும் தொழில் வாய்ப்புக்கள் முடக்கப்படக்கூடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் சில நாடுகளை வருத்தமடையச் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பெரும் எண்ணிக்கையிலான இலங்கையர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றி வருவதாகவும் இந்த இலங்கைப் பாணியாளர்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டால் நாட்டில் பாரியளவு பிரச்சினைகள் ஏற்படக் கூடும் எனவும் பொருளாதாரம் பாதிக்கப்படக் கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இனவாதம், மதவாதம் உலகின் எந்தவொரு தரப்பிற்கும் நன்மை ஏற்படுத்தி;யதில்லை என சுட்டிக்காட்டியுள்ள சபாநாயகர் கடும்போக்குவாதங்களை கைவிட்டு அனைவரும் சமாதான வழிகளில் சகோதரத்துவத்துடன் வாழ்வதற்கு கற்றுக்கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.