உலகம் பிரதான செய்திகள் விளையாட்டு

டெஸ்ட் பந்து வீச்சு தரவரிசையில் ரபாடா முதலிடம்


அவுஸ்திரேலியாவிற்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் 11 விக்கெட்டுக்கள் வீழ்த்திய தென்ஆப்பிரிக்காவின் ரபாடா டெஸ்ட் பந்து வீச்சு தரவரிசையில் முதல் இடத்தை பிடித்துள்ளார். தென்ஆப்பிரிக்காவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கடந்த 9ம் திகதி முதல் நேற்று வரை நடைபெற்றது. இதில் தென்ஆப்பிரிக்கா 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில்; முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் 6 விக்கெட்டும் ரபாடா வீழ்த்தியிருந்தார் .இதனைத் தொடர்ந்து டெஸ்ட் போட்டிக்கான பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.  ரபாடா 902 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ள நிலையில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் அண்டர்சன் 887 புள்ளிகளுடன் 2-வது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளார்.

ரபாடா ஓழுங்கீன நடவடிக்கைக்குள்ளாகியமையினால் கடைசி இரண்டு டெஸ்டிலும் விளையாட அவருக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது டெஸ்ட் போட்டிக்கான துடுப்பாட்டகாரர்களின் தரவரிசையில் ஸ்மித் 943 புள்ளிகளுடன் முதல் இடத்திலும் விராட் கோலி 912 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், ஜோ ரூட் 881 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.