இலங்கை பிரதான செய்திகள்

இணைப்பு 2 – நடேஸ்வர கல்லூரி கிணற்றையும் , கட்டடத்தையும் காவல்துறையினர் ஆக்கிரமித்து உள்ளனர். – கஜதீபன் குற்றசாட்டு.


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

எமக்கு ஏதாவது பிரச்சனை என்றால் நாம் காவல்துறையினரிடம் முறையிட செல்வோம் இங்கே பொலிசாரே பிரச்சனை என்றால் யாரிடம் முறையிடுவது என தெரியாமல் உள்ளது என வடமாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் பா.கஜதீபன் தெரிவித்தார். வடமாகாண சபையின் 118 ஆவது அமர்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைதடியில் உள்ள பேரவைக்கட்டடத்தில் நடைபெற்றது.

அதன் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ,

இராணுவ ஆக்கிரமிப்பில் 26 வருடங்களாக காணப்பட்ட காங்கேசன்துறை நடேஸ்வர கல்லூரி இராணுவத்தினரால் 2016 ஆம் ஆண்டு மாசி மாதம் கையளிக்கப்பட்டு பாடசாலை மீள ஆரம்பிக்க ப்பட்டு உள்ளது. தற்போது இரண்டு வருடங்கள் கடந்த நிலையிலும் பாடசாலை கிணறு மற்றும் பாடசாலை கட்டடம் ஒன்றினை  காவல்துறையினர்  இன்னமும் மீள கையளிக்கவில்லை. இதனால் மாணவர்கள் நீரை பெறுவதற்கு சிரமங்களை எதிர்நோக்கு கின்றார்கள்.

காவல்துறையினர் தமக்கு தேவையான நீர் மூலங்களை தேடிக்கொள்வது அவர்களது பிரச்சனை அதற்காக பாடசாலை கிணற்றினை கையகப்படுத்தி , வைத்திருப்பது சட்ட முரணாது. வேறு நபர்கள் அவ்வாறு சட்ட முரணாக நடந்து கொண்டால் காவல்துறையினரிடம் முறையிடலாம் ஆனால் இங்கே காவல்துறையினரே சட்ட முரணாக நடந்து கொள்ளும் போது யாரிடம் முறையிடுவது.

மாகாண  காவல்துறை அதிகாரம் எங்கள் கையில் உள்ளது என வெறுமன கூறிக்கொண்டு இருக்காது. பாடசாலை கிணற்றையும் கட்டடத்தையும் பொலிசாரிடம் இருந்து விரைந்து மீட்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

வலி.வடக்கில் எட்டு பாடசாலைகள் இராணுவ ஆக்கிரமிப்பில்.

வலி.வடக்கில் இராணுவ கட்டுப்பாட்டில் எட்டு பாடசாலைகள் உள்ளன என வடமாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் பா.கஜதீபன் தெரிவித்தார்.  வடமாகாண சபையின் 118 ஆவது அமர்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைதடியில் உள்ள பேரவைக்கட்டடத்தில் நடைபெற்றது.   அதன் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ,
வடமாகாண சபை ஆரம்பிக்கும் போது வலி.வடக்கில் 16 பாடசாலைகள் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்தன. குறித்த பாடசாலைகளை விடுவிக்குமாறு கோரி பல போராட்டங்களை முன்னெடுத்து பல நடவடிக்கைகள் ஊடாக 8 பாடசாலைகளை இராணுவத்திடம் இருந்து மீட்டு மீள ஆரம்பித்துள்ளோம்.
இன்னமும் எட்டு பாடசாலைகளை மீட்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளையும் துரித கெதியில் முன்னெடுக்க வேண்டும்.  அதேவேளை , மீள ஆரம்பிக்க பட்ட பாடசாலைகளில் மீள் குடியேற்ற அமைச்சின் ஊடாகவும் வேறு வழிகள் ஊடாகவும் கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளன. ஆனால் பாடசாலைகளில் தளபாட வசதிகள் உட்பட பல வளப் பற்றாகுறைகள் காணப்படுகின்றன.  என தெரிவித்தார்.

மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள். – கஜதீபன்

Mar 13, 2018 @ 10:12

மாணவர்களின் பாதுகாப்புக்காக ஆசிரியர்களை நியமியுங்கள். இல்லை எனில் நாங்கள் குற்றவாளிகள் ஆகிவிடுவோம். என வடமாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் பா.கஜதீபன் தெரிவித்தார். வடமாகாண சபையின் 118 ஆவது அமர்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைதடியில் உள்ள பேரவைக்கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ,

மீள் குடியேறிய பகுதிகளில் மீள ஆரம்பித்து உள்ள பாடசாலைகளில் ஆசிரிய பற்றாக்குறைகள் அதிகளவில் காணப்படுகின்றது. எங்களுக்கு தொண்டர் ஆசிரியர்கள் வேண்டாம் என கூறி வருகின்றோம். இந்நிலையில் அந்த பாடசாலைகளில் ஆசிரியர்கள் பற்றாகுறையாக உள்ளதால் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. வலிகாமம் பகுதிகளில் பல பாடசாலைகளில் ஆசிரியர்கள் தேவைக்கு அதிகமாக உள்ளனர்.

அவர்களை வலி.வடக்கு பாடசாலைகளுக்கு அனுப்ப முடியும். அந்த பாடங்களுக்கு உரிய ஆசிரியர்கள் எனும் காரணம் கூறப்படாமல் மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் அனுப்பப்பட வேண்டும். இல்லை எனில் மாணவர்களுக்கு ஏதாவது நடந்தால் அதற்கான முழு பொறுப்பையும் ஏற்க வேண்டிய குற்றவாளிகளாக நாங்கள் நிற்போம் என தெரிவித்தார்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.