Home உலகம்அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ரெக்ஸ் ரில்லர்சன் பதவி நீக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ரெக்ஸ் ரில்லர்சன் பதவி நீக்கப்பட்டுள்ளார்.

by admin

 
அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ரெக்ஸ் ரில்லர்சன் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக சிஐ.ஏ அமைப்பின் இயக்குனர் மைக் பாம்பியோ நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் கடந்த வருடம் பொறுப்பேற்றதில் இருந்து ரெக்ஸ் டில்லர்சன் ராஜாங்கச் செயலாளராக நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், ராஜாங்கச் செயலாளர் பொறுப்பில் இருந்து டில்லர்சன் நீக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை சி.ஐ.ஏ அமைப்பின் துணை இயக்குனராக இருந்த கினா ஹாஸ்பெல் புதிய சி.ஐ.ஏ இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். முதலாவது சி.ஐ.ஏ பெண் இயக்குனர் என்ற பெருமையை கினா ஹாஸ்பெல் பெற்றுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் டிரம்ப் இந்த நியமனங்களை அறிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More