174
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் முன்வைக்கப்படும் என கூட்டு எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர். கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்கள் மேற்கொண்ட சந்திப்பின் போதே இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர். இந்த சந்திப்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் பங்கேற்றுள்ளார். பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் முன்னதாகவே சமர்ப்பிக்கப்படவிருந்த போதும் கண்டி வன்முறைகளைத் தொடர்ந்து நம்பிக்கையில்லா தீர்மானம் ஒத்தி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love