Home இலங்கைகண்டி சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமது சம்பளத்தை வழங்கும் பாராளுமன்ற உறுப்பினர்

கண்டி சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமது சம்பளத்தை வழங்கும் பாராளுமன்ற உறுப்பினர்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கண்டியில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் போது உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது பாராளுமன்ற உறுப்பினர் சம்பளத்தை வழங்குவதாக முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணநாயக்க தெரிவித்துள்ளார். இந்தக் குடும்பங்களுக்கு நிலையான வருமானம் கிடைக்கும் வரையில் தமது பாராளுமன்ற உறுப்பினர் சம்பளத்திலிருந்து தலா 20000 ரூபா இந்தக் குடும்பங்களுக்கு வழங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

வன்முறைச் சம்பவங்களினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேற்றைய தினம் ரவி கருணாநாயக்க நேரில் சென்றிருந்தார். வரலாற்றில் நாம் பாடங்களைக் கற்றுக்கொள்ளாத ஓர் இனமாகவே காணப்படுகின்றோம் என குறிப்பிட்டுள்ள அவர் குறுகிய அரசியல் நோக்கம் உடையவர்கள் நாட்டைப் பற்றி கரிசனை கொள்ளாது இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More