Home இலங்கை இறுதியுத்தத்தில் கால்கள், கைகள், கண்கள் இன்றி காயமடைந்த மக்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்:

இறுதியுத்தத்தில் கால்கள், கைகள், கண்கள் இன்றி காயமடைந்த மக்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்:

by admin

கிளிநொச்சி வைத்தியசாலையில் தான் அரச மருந்தாளராக பணியாற்றியபோது ஷெல் தாக்குதல் இடம்பெற்றதை காணமுடிந்தது எனவும் மருத்துவமனை மீதும் தாக்குதல்கள் இடம்பெற்றன எனவும் கமலாம்பிகை கந்தசாமி என்பவர் இன்றையதினம் ஜெனிவா மனித உரிமை பேரவையில் நடைபெற்ற உபகுழுக்கூட்டத்தில் தெரிவித்துள்ளார். . இந்தத் தாக்குதல்கள் காரணமாக மக்கள் கால்கள், கைகள், கண்கள் இன்றி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உண்மை மற்றும் நீதித் திட்டத்தின் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தலைமையில் இடம்பெற்ற இந்த உபகுழுக்கூட்டத்தில் பல சர்வதேச பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.

கமலாம்பிகை கந்தசாமி என்னும் குறித்த பெண் மேலும் தெரிவிக்கையில் யுத்தத்தின்போது தமிழ் மக்களுக்கு எதிராக இனப்படுகொலை இடம்பெற்றதை தான் கண்டுள்ளதாகவும்    1996 ஆம் ஆண்டு  தான் மல்லாவி வைத்தியசாலையில் முதல் அரச மருந்தாளராக பணியாற்றியதாகவும் அங்கு சேவையில் இருக்கும்போது அதிகளவான காயமடைந்த மக்கள் சிகிச்சை பெற வந்தனர் எனவும் தெரிவித்துள்ளார்.

பாலியல் வல்லுறவுக்குட்பட்ட பெண்களும் அங்கு சிகிச்சைக்காக வந்திருந்தனர் எனவும் தனக்குத் தெரிந்து பல பாலியல் வல்லுறவு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு மருந்துகளை அனுப்புவதற்கு கடமைப்பட்டிருந்த போதும் தமக்குத் தேவையான முழுமையான மருந்துகளையும் அரசாங்கம் அனுப்பவில்லை எனவும் குறைந்தளவான மருந்துகளே தமக்கு கிடைத்தன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பல குறைபாடுகள் காணப்பட்டதாகவும் மருத்துவமனையில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நேரங்களில் மின்பிறப்பாக்கியை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமே வழஙகியது எனவும் மருந்து குறைப்பாடு ஏற்பட்டபோதும் செஞ்சிலுவை சங்கமே உதவியது எனவும் அவர் தெரிவித்துள்ளார்

மல்லாவி வைத்தியசாலை அமைந்திருந்த பகுதியில் ஷெல்தாக்குதல்கள் இடம்பெற்றதனால் பல மருத்துவ அதிகாரிகள் கடமையை புறக்கணித்து சென்றனர் எனவும் எனினும் தாம் அவர்களை குறைகூற முடியாது எனவும் தமது உயிரை அவர்கள் பாதுகாத்துக்கொள்ளவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

அதன்பின்னர் 2004ஆம் ஆண்டிலிருந்து 2008 ஆம் ஆண்டு வரை கிளிநொச்சி வைத்தியசாலையில் பணியாற்றியதாகவும் இக்காலப்பகுதியில் முல்லைத்தீவு, கிளிநொச்சி, முள்ளிவாய்க்கால் பகுதிகளில் யுத்தம் தீவிரமடைந்தமையினால் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தாம் கிளிநொச்சி வைத்தியசாலையில் பணியாற்றியபோது ஷெல் தாக்குதல் இடம்பெற்றதை காணமுடிந்ததெனவும் மருத்துவமனை மீதும் தாக்குதல்கள் இடம்பெற்றன எனவும் மக்கள் கால்கள், கைகள், கண்கள் இன்றி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர் எனவும் கமலாம்பிகை கந்தசாமி தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

1 comment

K.Ranjithkumar March 17, 2018 - 9:04 am

Here her most of the statement having the base of validation. In fact those who ever injured true, other there are so many facts. Hence I am vehemently disagree over sexual harassment who ever under went this time. Where as most of those had been not unleashed the Sri Lankan security forces in larger scale. Where they don’t have such access to that. They were engaged in fire over their enemies opponents LTTE who ever in other side face to face or els in shelling or els bombings. There those who ever injured by those shrapnels firearms wounds admissible. But sexual exploitation by those state forces bit so far very negligible effect. Most of those done by those host community men at large by say even tamil men nabours of those women, even why not some LTTE men would be. Who knows in those treacherous war zones. By access by those security men over to those women in rare gesture unless where as they taken over those parameters. That happen fairly in such controlled manner in strict observation of those international humanitrain organizations namely UNHCR,ICRC, MSF, OXFAM, and other local NGO’s conjunction with those state forces cum state officials. This is my humble view where I had been was a humanitrain officer before works with UNHCR in those war zones of Sri Lanka all those years. May God bless mother Sri Lanka.

Reply

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More