அகமதாபாத் விமான நிலையத்துக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலினைத் தொடர்ந்து மத்திய அரசு விடுத்த எச்சரிக்கையால் சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தின் தலைநகரான அகமதாபாத் விமான நிலையத்துக்கு இன்று காலை வந்த மிரட்டலினை அடுத்து . மோப்ப நாய் உதவியுடன் பாதுகாப்பு படையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
இந்த மிரட்டல் எதிரொலியாக மத்திய உள்துறை அமைச்சகம் இன்று விடுத்துள்ள எச்சரிக்கையால் சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. ஐந்து அடுக்குகளை கொண்ட உயர்நிலை பாதுகாப்பின்கீழ் சென்னை விமான நிலையம் கொண்டு வரப்பட்டுள்ளது. பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை மோப்ப நாய்களின் உதவியுடன் தீவிரமாக பரிசோதித்த பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். வெடிகுண்டுகளை செயலிழக்க வைக்கும் கருவிகளுடன் நிபுணர்களும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்
துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் சென்னை வருவதால் விமான நிலையம் மற்றும் அவர்கள் செல்லும் இடங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது