முன்னணி நடிகையான ஸ்ரீவித்யாவின் வீட்டை ஏலத்திற்கு விட இருப்பதாக வருமான வரித்துறை அறிவித்துள்ளது. வருமான வரி பாக்கி இருப்பதால் அதை வசூல் செய்வதற்காக அவரது வீட்டை ஏலத்திற்கு விட இருப்பதாக தெரிவித்துள்ளனர். பல பிரபல நடிகர்களுடன் நடித்த ஸ்ரீவித்யா மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் நடித்து வந்தார். புற்றுநோய் காரணமாக அவர் கடந்த 2006-ல் உயிரிழந்திருந்தார்.
ஸ்ரீவித்யா சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு சென்னை அபிராமபுரத்தில் இருக்கிறது. அவரின் சகோதரர் நிர்வகித்து வருகின்ற இந்த வீட்டில் தற்போது நடன பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் செலுத்தவேண்டிய வருமான வரியை நீண்ட நாளாக செலுத்தாமல் நிலுவை வைத்திருக்கிறார்களாம். இதனால் வருமான வரித்துறையினர் இன்று குறித்த வீட்டில் சோதனை நடத்தியுள்ளனர்.
1250 சதுர அடி கொண்ட இந்த அடுக்குமாடி குடியிருப்பு மார்ச் 27-ம் திகதி ஏலத்திற்கு வருகிறது. அதன் உத்தேச மதிப்பு ரூ. 1 கோடியே 17 லட்சத்து 10 ஆயிரம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவித்யாhவிடம் இருந்து வர வேண்டிய வருமான வரி நிலுவை , வட்டி, ஏலச் செலவுத் தொகையை வசூல் செய்வதற்காக அவரது வீடு ஏலம் விடப்படுவதாக வருமான வரித்துறையினர வெளியிட்டுள்ள அறிக்கையில், தெரிவிக்கப்பட்டுள்ளது