இலங்கை பிரதான செய்திகள்

இலஞ்சம் கொடுக்க மறுத்தவரின் மோட்டார் சைக்கிளை பறித்து சென்ற காவல்துறையினர்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
உரிய அனுமதிப்பத்திரம் இல்லை என கூறி இலஞ்சம் கோரிய காவல்துறையினருக்கு இலஞ்சம் கொடுக்க மறுத்த குடும்பஸ்தரின் மோட்டார் சைக்கிளை காவல்துறையினர் பறித்து சென்றுள்ளனர். யாழ். முட்டாஸ் கடை சந்திக்கு அருகில் இன்று சனிக்கிழமை மதியம் குறித்த சம்பவம் இடம்பெற்று உள்ளது.

அது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது ,

தனது பிள்ளைக்கு ஏற்பட்ட சுகவீனம் காரணமாக மோட்டார் சைக்கிளில் மனைவியுடன் பிள்ளையை வைத்திய சாலைக்கு அழைத்து சென்றுள்ளார்.

அதன் போது முட்டாஸ் கடை சந்தியில் நின்றிருந்த போக்குவரத்து காவல்துறையினர் அவர்களை மறித்து வாகன வரி அனுமதிப்பத்திரம் , காப்புறுதி பத்திரம் என்பவற்றை சேதனையிட்டனர். பின்னர் வாகன சாரதி அனுமதிப்பத்திரத்தை சோதனையிட கோரிய போது காவல்துறையினரினால் வழங்கப்படும் அனுமதிப்பத்திரத்தை (தடகொல) கொடுத்தார்.

அதனை பரிசீலித்த காவல்துறையினர் அந்த அனுமதிப்பத்திரத்தின் காலம் முடிந்து விட்டது என கூறியுள்ளனர். அதற்கு அவர் ஆம் , குறித்த திகதிக்கு முன்னர் சாரதி அனுமதிப்பத்திரத்தை மீட்கததால் தற்போது நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதன் தவணை எதிர்வரும் 24ஆம் திகதி என கூறியுள்ளார்.

அதனை ஏற்க மறுத்த காவல்துறையினர் குறித்த அனுமதிப்பத்திரம் செல்லுபடியற்றது எனவும் அதனை பயன்படுத்தி வாகனம் செலுத்த முடியாது எனவும் இலஞ்சமாக சிறு தொகை தந்தால் தாம் விடுவதாகவும் கூறியுள்ளனர். அதற்கு குறித்த குடும்பஸ்தர் தன்னிடம் தற்போது உள்ள பணம் தனது பிள்ளையின் மருத்துவ செலவுக்கு போதுமாதாகவே உள்ளது என கூறியதுடன் , தான் எதற்கு இலஞ்சம் தர வேண்டும் என காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அதனால் அப்பகுதியில் பொதுமக்கள் கூடியதும் , காவல்துறையினர் மோட்டார் சைக்கிளை பறித்து செல்ல முற்பட்டு உள்ளனர். அதற்கு குடும்பஸ்தர் இடமளிக்காமல் , தொடர்ந்து வாக்குவாத ப்பட்டுள்ளார். அதனை அடுத்து காவல்துறையினர் குறித்த இடத்திற்கு யாழ். காவல் நிலையத்தில் இருந்து வாகனத்தில் மேலதிக காவல்துறையினரை அழைத்து , குடும்பஸ்தரின் மோட்டார் சைக்கிளை காவல்துறை வாகனத்தில் பறித்து ஏற்றி சென்றுள்ளனர்.

அதனால் குறித்த குடும்பஸ்தர் தனது மனைவி பிள்ளையுடன் நடந்தே சென்றார். காவல்துறையினரின் இந்த அநாகரிக செயற்பாடு அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது

Spread the love

1 Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

  • No if that person violated the road rules by not renewed his license even that he would have face in court case. That temporary license should renewed in Police station or els in court authorities making some other period of validating that road license. That the basic rule. Hence other corruption in those with in that closed Police station other matter. There every one should knows this basic ones in law in terms of Sri Lanka road rules in relation to those Laws in place.

Share via
Copy link