Home இந்தியாஜம்மு காஷ்மீரின் ரஜோரியில் பாகிஸ்தான் படையினரின் தாக்குதலில் 5 பேர் பலி..

ஜம்மு காஷ்மீரின் ரஜோரியில் பாகிஸ்தான் படையினரின் தாக்குதலில் 5 பேர் பலி..

by admin

ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் பாகிஸ்தான் படையினர் இன்று காலை அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் மூன்று குழந்தைகள் உள்பட ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இன்று காலை துப்பாக்கி மற்றும் சிறியரக மோட்டார் குண்டுகளால் பாகிஸ்தான் படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தியதாகவும் இந்த தாக்குதலில் எல்லையோர கிராமத்தில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று குழந்தைகள் உட்ப 5 பேர் கொல்லப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து, அனைத்து எல்லையோர கிராமங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பூஞ்ச் பகுதியிலும் தாக்குதல் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More